Friday, 23 October 2015

வானம் உன் கைகளுக்குள்



                             வானம்  உன்  கைகளுக்குள்
                                 பாவலர் கருமலைத்தமிழாழன்
                                    பூந்தென்றல்    வீதியுலா
                                                புறப்பட்டு    வருவதற்கே
                                    ஏந்திவரும்   பல்லக்கை
                                                எதிர்பார்த்தா    காத்துளது ?

                                    காரிருளை    மாய்ப்பதற்குக்
                                                கதிரவன்தான்    காலைவர
                                    தேரினையா    எதிர்பார்த்துத்
                                                தெருமுனையில்    காத்துளது ?

                                    கண்களினைப்    பறிக்கின்ற
                                                கார்மேக    மின்னல்தான்
                                    மின்சாரம்    எதிர்பார்த்தா
                                                மின்னுதற்குக்     காத்துளது ?

                                    தானிறங்கி    வருவதற்குத்
                                                தரையிருந்து    குழாய்இணைப்பு
                                    வானிற்கு    வருமென்றா
                                                வளமழையும்    காத்துளது ?

                                    சாதனைகள்   புரிவதற்குச்
                                                சந்தர்ப்பம்     வாய்க்குமென்று
                                    சோதனைகள்    செய்யாமல்
                                                சோம்பலுடன்   இருப்பதுவோ ?

                                    வாய்ப்புகளோ    உனைத்தேடி
                                                வரவேற்பு     கொடுக்காது
                                    வாய்ப்புகளை    உருவாக்கு
                                                வானம்உன்     கைகளுக்குள் !

கருகும் பிஞ்சுகள்


கருகும்  பிஞ்சுகள்
பாவலர்  கருமலைத்தமிழாழன்

பகர்கின்ற    கட்டாயக்    கல்விச்    சட்டம்
            பறைசாற்றும்    குழந்தைதொழி    லாளர்    சட்டம்
முகம்காட்டும்    கண்ணாடி    போல   யிங்கே
            முன்னிருந்தும்    கண்மறைக்கும்    வறுமை    யாலே
அகரத்தை    எழுதுதற்கே    கனவு    கண்டு
            அன்புத்தாய்    நீவிவிட்ட     அரும்வி   ரல்கள்
தகதகக்கும்    கந்தகத்து    மருந்தில்    தோய்ந்து
            தயாரித்துத்    தருகிறது     நெருப்புக்    குச்சி !

சீருடையில்    அழகொளிரச்   சிரிப்பு     திர்த்துச்
            சிற்றுந்தில்    அமர்ந்தபடி     கைய    சைத்துப்
பேருவகை     தருமென்று    கனவு    கண்டு
            பெருமன்பில்    நீவிவிட்ட    பிஞ்சு    விரல்கள்
சீருடையில்    தொழிற்சாலை    பெயர்வி    ளங்க
            சீறிவரும்   வெடிமருந்து    வாசம்   வீசும்
பேருந்தில்   செல்கிறது    வறுமை    என்னும்
            பெயரழிக்கத்   தீக்குச்சி     அடுக்கு   தற்கே !

பூப்போன்ற    மென்விரல்கள்    புத்த    கத்தைப்
            புரட்டிக்கண்    வியந்திடவே    பார்த்துப்    பார்த்து
நாப்புரள     பேசுதற்கு    முயற்சி    செய்து
            நல்லறிவு    பெறவாய்த்த    இளமை    தன்னில்
தீப்பற்றும்    வெடிமருந்து   கிடங்கிற்    குள்ளே
            திரியாக    வறுமையிலே    கருகுவ    தெல்லாம்
காப்பாற்றத்    திட்டங்கள்   வகுத்தி    டாமல்
            கள்ளராக    ஆட்சிசெய்யும்    கயவ   ராலே !


பாவலர் கருமலைத்தமிழாழன் பற்றிய விவரம்



பாவலர் கருமலைத்தமிழாழன் பற்றிய விவரம்
01.      இயற்பெயர்      :            கி.நரேந்திரன்
02.      புனைபெயர்      :            கருமலைத்தமிழாழன்
03.      சொந்த ஊர்      :            கிருட்டிணகிரி (கருமலை)
04.      பெற்றோர்        :            மு.கிருட்டிணன் - இராசம்மாள்
05.      பிறந்தநாள்       :            16.07.1951
06.      கல்வித்தகுதி     :            புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்.,
07.      முகவரி             :            2/16/6, ஆர்.கே.இல்லம்,
                                                முதல்தெரு, புதிய வசந்தநகர்,
                                                ஒசூர் - 635 109, கிருட்டிணகிரி மாவட்டம்.
08.      பணி                 :            25 ஆண்டுகள் தமிழாசிரியர்,
                                                10 ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளித்
                                                தலைமையாசிரியர்
09.      தொலைப்பேசி  :            04344 - 245350, 09443458550
10.      முதற்கவிதை வெளிவந்த ஏடு :
                                                பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களால்
                                                நிறுவப்பட்ட குயில் ஏடு 1969
11.      கவிதைகள் வெளிவந்த ஏடுகள்:
                                   01.         குயில்                    02. காஞ்சி
                             03. கண்ணதாசன்            04. தமிழ்ப்பணி
                             05. முல்லைச்சரம்            06. புன்னகை
                             07. காவியப்பாவை         08. தெசிணியின் கவிதை
                             09. தமிழரசு                     10. அமுதசுரபி
                             11. தென்மொழி              12. தெளிதமிழ்
                             13. நற்றமிழ்                     14. வெல்லும் தூயதமிழ்
                             15. ஓம்சக்தி                     16. செந்தமிழ்ச் செல்வி
                             17. கணையாழி                18. இனிய உதயம்
                             19. கவிக்குயில்                20. காக்கைச்சிறகினிலே
                             21. எழுகதிர்                    22. இலக்கியச்சோலை
                             23. ராணி                        24. தேமதுரத் தமிழோசை
                             25. தினத்தந்தி                 26. தமிழ் இலெமுரியா
                             27. தினகரன்                   28. தினமணி
                             29. தினமலர்                   30. மாலைமுரசு
                             31. மாலைமலர்                32. முரசொலி
                             -போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன.
12.     வெளிவந்த கவிதை நூல்கள்:
                                   01.         நெஞ்சின் நிழல்கள் (1976)
                                   02.         மலர்விழி (காவியம் (1978)
                                   03.         காவியத்தலைவன் (1978)
                                   04.         காற்றை மணந்த கவிதைகள் (1995)
                                   05.         நீர்க்கால்கள் (1998)
                                   06.         ஒப்பனைப்பூக்கள் (1998)
                                   07.         மண்ணும் மரபும் (1999)
                                   08.         தமிழவேள் தமிழ்ப்பாவை (1999)
                                   09.         வீணை மத்தளமாகிறது (2000)
                                   10.         மரபின் வேர்கள் (2002)
                                   11.         புதிய குறுந்தொகை (2003)
                                   12.         வேரின் விழுதுகள் (2004)
                                   13.         களம் வெல்லும் கலைஞர் (2005)
                                   14.         சுவடுகள் (2008)
                                   15.         உன்முகமாய் இரு (2010)
                                   16.         அருள்மிகு மரகதாம்பிகை
                                      சந்திரசூடேசுவரர் பாமாலை (1997)
                                             17.       கல்லெழுத்து (2014 )
13.     உரைநடை மற்றும் ஆய்வு நூல்கள் :
                                   18.       புதுக்கவிதையில் தொன்மவியலாய்வு (1998)
                                   19.         பண்பில் வாடை (2001)
                                   20.         திருக்குறள் (உரை) (2000)
                                   21.         ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர
                                                சூடேசுவரர் திருக்கோயில் தலவரலாறு (2001)
14.     சிறப்பு :         01.         தமிழ்நாடு பாடநூல்களில் செய்யுட்
                                                பகுதியில் கவிதை பாடமாக சேர்க்கப்பட்டது.
                                   02.         (அ) வீணை மத்தளமாகிறது
                                   (ஆ) வேரின் விழுதுகள்
                                      - ஆகிய நூல்கள் எம்ஃபில் பட்டத்திற்காக ஆய்வு
                                      மேற்கொள்ளப்பட்டு, ஆய்வுபட்டம்
                                      வழங்கப்பட்டுள்ளது.
15.     பெற்ற விருதுகள்        :
01.     சென்னை பாவேந்தர் பாசறையால் 2002ஆம்  ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் விருது அளிக்கப்பட்டது.
02.     ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும் 'துளி' இதழும் இணைந்து 2003ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து ஒட்டக்கூத்தர் விருது அளித்தன.
03.     சென்னை கவிதை உறவு அமைப்பு 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்து கவிதைச்செல்வர் விருது அளித்தது.
04.     தமிழறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழாவை ஒட்டி நூற்றாண்டு விழா குழுவினரால் 2010இல் இலக்குவனார் விருது அளிக்கப்பட்டது.
05.     உலகத் தமிழ்க்கவிஞர் பேரவையும், தஞ்சை தாய் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய எழுத்தாளர் மாநாட்டில் 2011இல் குன்றக்குடி அடிகளார் அவர்களால் தமிழ்மாமணி விருது வழங்கப்பட்டது.
06.     நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தாரால் 2010ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டது.
07.     உரத்தசிந்தனை திங்களிதழ் சிறந்த வெண்பாக்கள் எழுதியமைக்காக 2012ஆம் ஆண்டு வெண்பாவேந்தர் விருது அளித்தது.
08.     டாக்டர் ஜே.ஜி.கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை சார்பில் 2012ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதைக் கருவூலம் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
09.     தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் 2012ஆம் ஆண்டில் பாவேந்தர் நெறி செம்மல் விருது வழங்கியது.
10.     தங்கவயல் டாக்டர் பேரா.வ.பெருமாள் அறக்கட்டளையால் 2005இல் தமிழ் இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது.
11.     கரூர் திரு.வி.க.மன்றம் சார்பில் 1992இல் இலக்கியச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
12.     சேலம் கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராசம்மாள் அறக்கட்டளையின் இலக்கியக்குழு 2003இல் மரபுப்பா பாவலர் விருது அளித்து சிறப்பித்தது.
13.     அனைத்துலகத் தமிழ் மாமன்றம் திண்டுக்கல் சிறந்த இலக்கியப்பணிக்காக 2005ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் விருது வழங்கி சிறப்பு செய்தது.
14.     சேலம் “சங்கொலி” இதழ் ஆசிரியர் சோலை இருசனாரின் மணிவிழா குழுவினரால் “தேன்மழைக்கவிஞர்” விருது வழங்கப்பட்டது.
15.     2008-2009ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் இராதாகிருட்டிணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
16.     நூல்கள் பெற்ற பரிசுகள் :
01.     பாரதஸ்டேட் வங்கி 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வீணை மத்தளமாகிறது நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
02.     பாரத ஸ்டேட் வங்கி 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக மரபின் வேர்கள் நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.
03.     சென்னை பகுத்தறிவாளர் கழகமும், மெய்யறிவு இதழும் இணைந்து 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கின.
04.     அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 2004ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக வேரின் விழுதுகள் நூலைத் தேர்ந்தெடுத்து முதல்பரிசு வழங்கியது.
17.    கவிதைப்போட்டிகளில் பெற்ற பரிசுகள்   :
01.     மதுரை காந்தி நிறுவனம் கஸ்தூரிபாய் காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி “வருமோ புதிய உலகு” என்ற தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
02.     பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப்பேரவை “புதிய சமுதாயம் படைப்போம்” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
03.     ஈரோடு தமிழ்ப் பேரவையும், துளி இதழும் இணைந்து நடத்திய “தமிழ் ஒளி ஓங்கும்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
04.     தினகரன் நாளிதழ் நடத்திய தொழில்மலர் கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
05.     தமிழ் படைப்பாளர்கள் சங்கம் 2013இல் “பொசுங்கட்டும் பொய்மை” தலைப்பில் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
06.     கவிஞர் செந்தமிழ்ச் செழியன் அறக்கட்டளை “மயக்கத்தில் தமிழன்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
07.     பெங்களுர்த் தமிழ்ச்சங்கம் 2012 பொங்கல் விழாவை ஒட்டி “அயலகத்தமிழர்” என்ற தலைப்பில் இந்திய அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
08.     கண்ணியம் இதழ் அதன் ஆசிரியர் முனைவர் குலோத்துங்கன் அவர்களின் 70ஆம் பிறந்த நாளை ஒட்டி “தடை தகர்த்து வாழும் தமிழ்” என்ற தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு.
09.     கவிக்குயில் இதழ் “ஊழலற்ற புதிய சமுதாயம் காண” எனும் தலைப்பில் 2013இல் மாநில அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு.
10.     புதுக்கோட்டை வெண்மணிப் பதிப்பகம் “குழந்தைத் தொழிலாளர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு.
11.     தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கமும், பரிவு இதழும் இணைந்து 2013இல் “வெகுண்டெழுவோம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு.
12.     இலண்டன் தமிழ்ச்சங்கம் உலக அளவில் “புதுயுகத்தமிழர்” தலைப்பில் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.
13.     வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை சார்பில் இலக்கியப்பீடம் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப்பரிசு.
14.     கவிக்கொண்டல், உரத்த சிந்தனை, குயில், மின்னல் தமிழ்ப்பணி, தெளிதமிழ், நற்றமிழ், சோலைக்குயில், இதழ்கள் நடத்திய வெண்பா, விருத்தப்பா போட்டிகளில் பலமுறை முதல்பரிசுகள்.
8.     தமிழ் வளர்ச்சிப் பணிகள் :
01.     மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் உலகத் தமிழ்க்கழகம் தொடங்கிய போது தருமபுரி மாவட்ட அமைப்பாளராகத் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தார்.
02.     தனித்தமிழ் இதழ்களை நூலகங்களில் இடம் பெறச்செய்யத் தனியாளாக நின்று போராடியபோது 1972இல் பணியாற்றிய தமிழாசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
03.     தென்மொழி, காஞ்சி, குயில் போன்ற இலக்கிய இதழ்களைத் தருமபுரி நகரச் சுற்று புறங்களில் முகவராக இருந்து அறிமுகம் செய்தார்.
04.     கன்னடம், தெலுங்கு மொழிகள் அதிகமாகப் பேசப்படும் ஒசூர் பகுதியில் 1985 முதல் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களுக்கு தமிழுணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
19.    இலக்கிய நிகழ்ச்சிகள் :
01.     பெங்களுர், பம்பாய், ஐதராபாத், தில்லி, திருவனந்தபுரம், அந்தமான் தமிழ் சங்கங்களில் இலக்கிய சொற்பொழிவு, கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
02.     மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் அமைப்புகளின் அழைப்பில் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
03.     தமிழகம் மற்றும் அயலகங்களில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
04.     பொதிகை, சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.
06.Wepsite: www.karumalaithamizhazhan.com

****